இந்த வருட புத்தக கண்காட்சி ஒரு புத்தக கடலாகவே பார்க்க தோன்றியது. இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் smartphone, laptop மற்றும் நவீன கருவிகள் பல இருந்தும் இந்த புத்தக கண் காட்சி நமக்கு தெளிவு படுத்துவது எந்த காலத்திலும் புத்தகம் படிக்கும் பழக்கம் குறையாது என்பதை நிதர்சனமாக எடுத்து காட்டுகிறது.
இதை உறுதி படுத்தும் வகையில் இங்கு கூடும் மக்கள் கூட்டம் அதை மேலும் உறுதி படுத்துகிறது. நிறைய பேர் குடும்பத்தோடு, அதிலும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து இருந்தது சற்று மகிழ்ச்சையாகவே இருந்தது.
படிக்கும் வழக்கும் எந்த சமுதாயத்தில் அதிகமாக இருக்கிறதோ அங்கு நிச்சயமாக ஒரு செழிப்பான மற்றும் அறிவார்ந்த சமுதாயம் வளர்ந்து மேம்படும் என்பதில் ஒரு போதும் ஐயம் இல்லை. இதில் பல தரப்பட்ட ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை வந்து பொறுமையாக சுற்றி பார்த்து பல தரப்பட்ட புத்தகங்களை வாங்கி சென்ற விதம் மனதுக்கு இதம் அளித்தது.
இந்த புத்தக கண்காட்சியில் வானதி பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், கிரி டிரேடிங், மத்திய அரசு நிறுவனமான செம்மொழி பதிப்பகம், தஞ்சை சரஸ்வதி மஹால் லைப்ரரி போன்ற எண்ணற்ற பதிப்பகங்களும் கிட்ட தட்ட 400 நிறுவனங்களுக்கு மேல் பங்கேற்று மார்ச் 6, 2022 அன்று முடிவடைகிறது. அதே போல் லட்சோப லட்சம் மக்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று சிறப்பாக நடை பெற்று ஒரு சென்னை நகரமே ஒரு புத்தக திருவிழா கோலம் பூண்டு இருக்கிறது.