முதியோர்கள் மகிழ்ச்சியே எங்களோட முதல் குறிக்கோள்! பிரிதிவிராஜ் | Old Is Gold Store

வீட்டில் இருக்கும் முதியர்களுக்கு என்றே பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் Old Is Gold Store. இது வீட்டில் தனியாக வசிக்கும் முதியோர்கள் பிரச்சினைகளுக்கு ஏற்ப பலதரப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இவர்களின் இந்த கடையில் கிடைக்கும் பொருட்களை பார்த்து விட்டு நிறைய வயதானவர்கள் இந்த கடையின் நிறுவனர்களான திரு பிரித்விராஜ் மற்றும் அவரது துணைவியார் திருமதி ஜெயஸ்ரீ அவர்களை வாயார வாழ்த்தி விட்டு செல்கிறார்கள். ஏனென்றால் இந்த அளவுக்கு அவர்களுது தேவையை புரிந்து கொண்டு ஒவ்வொரு பொருளையும் ஒரே இடத்தில் கிடைக்க செய்த படியால் அவர்களுது அலைச்சல் குறைந்ததாக கூறி ஆரவாரத்தோடு வந்து செல்கின்றனர், மற்றும் போன் மூலம் ஆர்டர் செய்து வீட்டில் பெற்றுக்கொள்கின்றனர்.

நிறைய வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இந்த நிறுவனம் பல தரப்பட்ட சேவைகளை அளித்து வருகிறது. அதில் ஒன்று வீட்டில் இருக்கும் முதியவர்கள் வெளியில் செல்லும் விதமாக, இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டால் அவர்களை அழைத்து செல்ல வண்டி மற்றும் ஒரு உதவி ஆளோடு அனுப்பி அவர்களுக்கு எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று விட்டு திரும்ப அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு விடுவார்கள்.

இது போல இன்னும் பல பல சேவைகளை முதியோர்களுக்காகவே அளித்து ஒரு மகத்தான சேவையை இந்த Old Is Gold Store அளித்து வருகிறது.

இந்த கடை இப்பொழுது சென்னை அடையார் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இயங்கி வருகிறது. மேலும் இவர்களது ஒன்லைன் ஸ்டார் மூளும் பொருட்கள் ஆர்டர் செயபவர்களுக்கு வீட்டிற்க்கே கொண்டு வந்து டெலிவரி செய்கிறார்கள். இவர்கள் சென்னை தவிர மற்ற ஊர்களுக்கும் டெலிவரி செய்கிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *